×

செவிலியர்கள் நெகிழ்ச்சி: அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம்

உலகம் முழுவதும் பரவும் கொரோனா தொற்றால், ஆரம்பத்தில் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டது. கொரோனா பாதித்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப் பது என்பது தெரியாமல் மிகுந்த சிரமமாக இருந்தது எனக்கூறிய செவிலியர் கள், தற்போது கொரோனா வார்டில் மிகவும் தைரியமாக செயல்படுவதாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், `கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செல்லும்போது குடும்பத்தில் யாரும் ஒத்துக்கொள்ள வில்லை. பின்னர் இதுதான் எங்கள் பணி என அனைவரும் புரிந்து கொண் டனர். பெண்கள் குடும்பத்தின் பல்வேறு பொறுப்பு வகிக்கின்றனர். குடும்பத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், பல்வேறு பிரச்னைகள், மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் அதிகமாக இருந்தது. தற்போது, கொரோனா பணிக்காக குடும்பத்தை மறந்து பணிகளில் சிறப்பாக செயல்படுகிறோம். குடும்பத்தில் இருந்து 15 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் பாசம் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது. செவிலியர்கள்தான் முதல்வரிசையில் நின்று நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபடுகிறோம்.

கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகள் சிறப்பாக பார்த்து கொண்டனர் என கூறும்போது மனதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. கொரோனா போர் களத்தில் செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணி செய்து வருகிறோம். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று நினைத்தாலும், கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். இதற்கு சுற்றுப்புற தூய்மையும், சமூக விலகலும் மிகவும் அவசியம்’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags : Nurses ,elasticity, work , commitment
× RELATED சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே...